டேவிட் வார்னர் முக்கிய பங்கு வகிப்பார் - ஆண்ட்ரூ மெக்டொனல்ட்!

Updated: Wed, May 24 2023 20:22 IST
'He's Clearly In Our Plans', Australia Coach Mcdonald Backs Warner To Make An Impact In WTC Final, A (Image Source: Google)

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராகப் பார்க்கப்படும் டேவிட் வார்னர் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

வார்னர் குறித்து பேசிய ஆன்ட்ரூ மெக்டோனல்ட் “டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் எதிர்வரும் தொடருக்கு அவரை அணியில் சேர்த்திருக்கிறோம். ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவரது பெரிய பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறோம். அவர் இரண்டு தொடர்களுக்குமே முக்கியமான பிளேயர் ஆவார். அவரை சேர்க்காமல் இருந்திருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு ஆஷஸ் தொடருக்கு நாங்கள் திறமையான வீரர் தேட வேண்டியது இருந்திருக்கும்.

ஆனால், அதுபோன்ற நடைபெறவில்லை. அவரையே தேர்ந்தெடுத்து விட்டோம். முதல் 2 ஆஷஸ் தொடருக்கு நாங்கள் வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். வார்னரும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார். அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கிறார். நான் அவரிடம் சமீபத்தில் பேசினேன். அவர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை