டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டார் ஹெட்மையர்!

Updated: Tue, Oct 04 2022 12:11 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரான் ஹெட்மையர். இவர் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரராகவும் பார்க்கப்பட்டர்.

இந்நிலையில் ஹெட்மையர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கான தனது விமானத்தை கடந்த சனிக்கிழமையன்று புறப்படும் தேதியிலிருந்து மாற்றியமைத்திருந்தார், ஆனால் இன்று அவர் தனது மறுசீரமைக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய போவதில்லை என்று அணிக்கு தெரிவித்தார்.  

"விமானம் கிடைப்பது ஒரு சவாலாக இருப்பதால், அவர் இன்று ஆஸ்திரேலியா செல்ல ஒரு இருக்கை கிடைத்தது, அதாவது அக்டோபர் 5 புதன்கிழமை மெட்ரிகான் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியை அவர் இழக்க நேரிடும்" என்று வெஸ்ட் இண்டீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹெட்மையர் மீண்டும் இன்று மதியம் நியூயார்க்கிற்குச் செல்லும் விமானத்திற்கு சரியான நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்ல முடியாது என்று கிரிக்கெட் இயக்குநரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து விலக்குவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து ஷிம்ரான் ஹெட்மையருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர் ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  

இதுகுறித்து விண்டீஸ் கிரிக்கெட் இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ் கூறுகையில், "குடும்பக் காரணங்களால் ஷிம்ரோனின் விமானத்தை சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றினோம், அவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதில் மேலும் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்தால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த மிக முக்கியமான போட்டியில் தயாராகும் அணியின் திறனை சமரசம் செய்ய நாங்கள் தயாராக இல்லை.

ஷமர் ப்ரூக்ஸ் எங்கள் சமீபத்திய டி20 சர்வதேச அணிகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த சிபிஎல்லின் கடைசி கட்டங்களில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக அவரை நாங்கள் மாற்று வீரராக அணியில் சேர்த்துள்ளோம்" என்று அவர் கூறினார். 

வெஸ்ட் இண்டீஸ்: நிக்கோலஸ் பூரன் (கே), ரோவ்மன் பவல், ஷமர் ப்ரூக்ஸ், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசின், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரேமன் ரீஃபர், ஒடியன் ஸ்மித்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை