ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!

Updated: Tue, May 10 2022 19:29 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் பேட்டிங்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் 11 போட்டியில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா தற்போது தான் 200 ரன்களையே தொட்டுள்ளார். சராசரி வெறும் 18 தான். ரோஹித் சர்மாவின் ஐபிஎல் வாழ்க்கையில் அவர் அடித்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர், சராசரி இது தான்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஃபார்ம்க்கு திரும்பினார். இதனால், நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாம் நடுவரின் தவறான முடிவால் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பேட்டில் பந்து படுவதற்கு முன்பே ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பட்டது என அசைவுகள் காட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொதுவாக மும்பை அணியையும், நடுவர்களை வைத்தும் பல மீம்ஸ்கள் வரும். அதற்கு காரணம், நடுவர்கள் எப்போதும் மும்பைக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்து விடுகிறார்கள் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் தற்போது, மும்பைக்கு எதிராகவே நடுவர்கள் தவறான முடிவை அறிவித்து விட்டார்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதனிடையே ரோஹித் சர்மா குறித்து பேசிய யுவராஜ் சிங், “ஹிட்மேனுக்கு தற்போது பேட் லக் இருக்கிறது. பெரிய இன்னிங்ஸ் விரைவில் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். அவர் நல்ல மன உத்வேகத்துடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குறைவாக ரன்கள் அடித்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மா ஷாட் அடிப்பதில் எந்த குறையும் இல்லை. எந்த பந்துகளை எதிர்கொள்வதிலும் சிக்கல் இல்லை. ஆனால் விராட் கோலி ஷாட் அடிப்பதில், அவ்வளவு சிக்கல் இருக்கிறது. அவருடைய பழைய தங்கு தடையின்றி செல்லும் ஆட்டத்தை இப்போது பார்க்க முடிவதில்லை. தொடர்ந்து ஒரே மாதிரியான பந்தில் ஆட்டமிழந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை