ENG vs IND: கோலியின் கேப்டன்சியை புகழும் பிராட் ஹாக்!

Updated: Tue, Aug 24 2021 15:28 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று வியக்க வைத்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேவில் நாளை (ஆக.25) தேதி தொடங்குகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்பில் இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், இந்திய அணியின் லார்ட்ஸில் கடைசி நாளில் வெளிப்படுத்திய மிரட்டலான ஃபார்மை அப்படியே மூன்றாவது போட்டியிலும் வெளிப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.

இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, தொடர்ந்து சொதப்பி வரும் புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

போட்டி தொடங்க, இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், விமர்சகர்கள் பலரும் தங்கள் பிளேயிங் லெவன் அணியில், புஜாராவுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவை அணியில் சேர்த்துள்ளனர். அந்த வகையில் இன்று மாதிரி பிளேயிங் லெவன் அணியும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தன்னுடைய யூடியூப் சேனலில் விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "கேப்டன் என்பவர் எப்போதும் தாக்கம் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதனை விராட் கோலி கச்சிதமாக செய்து வருகிறார். பேட்டிங்கில் தனது தடுமாற்றத்தை, ஆட்டத்தில் தான் ஏற்படுத்தும் கேப்டன்ஷிப் தாக்கத்தினால் மறைத்து விடுகிறார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 62 ரன்களே அடித்திருக்கிறார். ஆனால், அதற்காக அவர் பின்வாங்குவதுமில்லை. 

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

களத்தில் அதே உற்சாகத்துடனும், வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உள்ளார். அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. களத்தில் இறங்கிய பிறகு, தன் பொறுப்பை உணர்ந்து அவர் அதில் வேலை செய்கிறார். ஆட்டத்தில் துடிப்பாக, வேகமாக அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். இதனை பார்க்கும் இளம் வீரர்கள், அவர்களும் அதே ஆக்ரோஷ, துடிப்பான மனநிலைக்கு மாறுகின்றனர். தங்கள் கேப்டனே இப்படி ஆக்ரோஷமாக இருப்பதால், வீரர்கள் ஆட்டோமேட்டிக்காக அந்த மோடுக்கு சென்றுவிடுகின்றனர்” என்று புகழ்ந்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை