இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இருந்த ஹாப்கின்சன், டௌசன் விலகல்!
இங்கிலாந்து அணி சமீபத்தியில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடியது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணியானது, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் இப்போட்டியில் 5 ஓவர்களை மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் தொடர் மழை கரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி முழுவதுமாக கவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலமாக இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான இத்தொடரின் முடிவுக்கு பிறகு அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து கார்ல் ஹாப்கின்சன், ரிச்சர்ட் டௌசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் இங்கிலாந்து அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மெக்கல்லம் தலைமையில் புதிய பயிற்சியாளர் குழுவானது அமையவுள்ளது. இதன் காரணமாகவே தற்சமயம் கார்ல் ஹாப்கின்சன் மற்றும் ரிச்சர்ட் டௌசன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக கார்ல் ஹாப்கின்சன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவர் பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் இங்கிலாந்து அணியானது 2019ஆம் ஆண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2022ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரிச்சர்ட் டௌசன் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இங்கிலாந்து அண்டர்19 அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்ட நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.