பிபிஎல் 2021: தண்டரை வீழ்த்தியது சிக்சர்ஸ்!

Updated: Sun, Dec 26 2021 18:19 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ர சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 16ஆவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சிக்சர்ஸ் அணி டேனிய ஹூக்ஸ், டேன் கிறிஸ்டியனின் அதிரடியான ஆட்டத்தினால் 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஹூக்ஸ் 50 ரன்களையும், டேன் கிறிஸ்டியன் 41 ரன்களையும் எடுத்தனர். தண்டன் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய தண்டர் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியில் ஜேசன் சங்கா மட்டும் நிலைத்து விளையாடி 47 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால் 15.1 ஓவர்களில் 142 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை