நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Wed, Jan 15 2025 10:22 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.

இந்நிலையில் இத்தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேர்ந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன அஸ்வின் ஓய்வு தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார். அதிலும் குறிப்பாக ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் அவர் ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

ஏனெனில் இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

இதுதவிர்த்து 116 ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்ததுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் மிகப்பெரும் காரண்மாக இருந்தார் என்பதை யாராலும் மறக்க முடியாது. 

மேலும் சிறப்பான ஃபார்மில் இருந்த அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் அஸ்வின் தனது யூடியுப் சேனலில் தனது ஓய்வு முடிவு குறித்தும், ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் விளையாடதது குறித்தும் மனம் திறந்துள்ளர். இதுகுறித்து பேசிய அவர், “நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் அணியில் எனக்கு இடம் எங்கே?

நிச்சயமாக இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இல்லை, வேறு எங்காவது இருந்துதான் விளையாட வேண்டும் என்பது தெளிவாகிறது. நான் விளையாட்டைப் பற்றி நேர்மையாகச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு ஃபேரவல் டெஸ்ட் விளையாட விரும்பிகிறேன் என்றாலும், நான் அந்த இடத்திற்குத் தகுதியானவன் அல்ல. ஆனால் எனது ஃபேரவல் டெஸ்ட் போட்டி என்ற காரணத்தினாலேயே நான் அணியில் இருக்கிறேன் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அதனால் அப்படி ஒரு போட்டி எனக்கு வேண்டாம்.

Also Read: Funding To Save Test Cricket

நான் என்னுடைய கிரிக்கெட்டில் இன்னும் பலம் வாய்ந்த ஒருவராக இருப்பதாக உணர்கிறேன். என்னால் இன்னும் சில காலம் விளையாடி இருக்க முடியும். ஆனால் மக்கள் 'ஏன்' என்று கேட்கும்போது 'ஏன் கூடாது' என்று கேட்பதற்கு முன்பேவும் இந்த முடிவை எடுத்தது நல்லது என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை