இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் - இளம் வீரர் குறித்து அப்துல் ரஸாக் கருத்து!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் டி20 கிரிக்கெட் லீக் ஆன பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எட்டாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான் அணியும், சர்ஃபராஸ் அகமது தலைமையிலான க்யாட்டா கிளாடியேட்டர் அணியும் மோதின.
முதலில் விளையாடிய சர்ப்ராஸ் தலைமையிலான அணி, முல்தான் சுல்தான் அணியின் 20 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷானுல்லா அசுர வேதத்தில் அவருக்கு ஐந்து விக்கெட்டுகளை கொடுத்து 18.5 ஓவரில் 110 ரண்களுக்கு சுருண்டது.
ஜேசன் ராய், சர்ப்ராஸ் அகமது, உமர் அக்மல், இஃப்திகர் அகமது, நசீம் சா என ஐந்து பிரபல சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்டவர்களை வீழ்த்தி ஆச்சரியம் தந்தார். மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் தந்து ஒரு மெய்டன் செய்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேற்று இவர் அதிகபட்ச வேக சராசரியை பிஎஸ்எல் தொடரில் பதிந்து புதிய சாதனையை செய்தார். நேற்று இவரது வேக சராசரி 144.37. இதற்கு முன் ஹரிஷ் ரவுப் 144.16 வேக சராசரியை வைத்திருந்ததே சாதனையாக இருந்தது. மேலும் இவர் தான் முதல் ஓவரில் 150 கிலோமீட்டர் வேகசராசரியை வைத்திருந்தார். அதிகபட்சமாக 152 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருந்தார்.
இவர் குறித்து பாகிஸ்தான் அணியில் முன்னாள் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கூறும் பொழுது, “நியூசிலாந்து இங்கு டெஸ்ட் தொடர் விளையாட வரும் பொழுது இவரை பாகிஸ்தான் அணியில் சேர்த்து இருந்தோம். நான் இவரை பாகிஸ்தான் டி20 கோப்பையில் பார்த்திருக்கிறேன்.
இவர் என்னை வெகுவாக கவர்ந்தார். நாங்கள் இவருடன் வேலை செய்தால் இவர் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தினால், இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும். பிஎஸ்எல் தொடரில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரிய மட்டத்தில் நாம் வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.