வலுவான கம்பேக் கொடுக்க முயற்சி செய்வோம் - குசால் மெண்டிஸ்!

Updated: Thu, Nov 02 2023 23:00 IST
வலுவான கம்பேக் கொடுக்க முயற்சி செய்வோம் - குசால் மெண்டிஸ்! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதை சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் தெறிக்க விடும் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்து 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் படுதோல்வியை சந்தித்த இலங்கை உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் கொடுத்த கேட்சுகளை ஆரம்பத்திலேயே தவற விட்டது தோல்வியை கொடுத்ததாக இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் பேட்டிங்கில் தாம் உட்பட அனைவரும் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பேசிய அவர், “எங்களுடைய அணியும் செயல்பாடுகளால் ஏமாற்றத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய செயல்பாடும் ஏமாற்றமளிக்கிறது. இந்திய பவுலர்கள் இரவு நேரத்தில் வேகத்தின் தன்மையை சரியாக பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசினார்கள். துரதிஷ்டவசமாக நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். இப்போட்டி நடைபெற்ற மைதானம் ஆரம்பத்தில் மெதுவாக இருக்கும் என்று நினைத்தே டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தேன்.

மதுஷங்கா சிறப்பாக பந்து வீசிய நிலையில் விராட் கோலி மற்றும் கில் இவர் கொடுத்த கேட்ச்களை தவற விட்டோம். அது போட்டியின் முடிவை மாற்றக் கூடியதாக இருந்திருக்கலாம். எங்களுடைய பவுலர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் முதல் 6 ஓவர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய பவுலர்களுக்கு பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் சிறப்பாக செயல்பட்டு வலுவான கம்பேக் கொடுக்கும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை