கோலியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப்!

Updated: Thu, Dec 01 2022 12:15 IST
'I Don’t Think Any Other Player Can Hit Those Shots Off My Bowling': Haris Rauf Hails Virat Kohli! (Image Source: Google)

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் படுதோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை போல இந்த டி20 உலகக்கோப்பை தொடரும் இந்திய அணிக்கு சாதகமாக அமையவிட்டாலும், இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடிய விதம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

பழைய விராட் கோலியின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வருட டி20 உலகக்கோப்பை தொடர் விருந்தாக அமைந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனியாக போராடி இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்ததையும், இக்கட்டான போட்டியின் 19ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த இரண்டு மிரட்டல் சிக்ஸர்களையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் இன்னிங்ஸே அவரது கிரிக்கெட் கேரியரின் மிக சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது, விராட் கோலியும் இதனை பல இடங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

விராட் கோலி பல இடங்களில் பாகிஸ்தான் அணியுடனான இந்த குறிப்பிட்ட போட்டி குறித்து பேசியிருந்தாலும், போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகனான ஹாரீஸ் ரவூஃப் இந்த போட்டியில் விராட் கோலி அடித்த மிரட்டல் சிக்ஸர்கள் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய ஹாரிஸ் ரவூஃப், “நிச்சயமாக விராட் கோலியை தவிர வேறு எவராலும் அந்த பந்தில் அப்படி ஒரு சிக்ஸர் அடித்திருக்கவே முடியாது. என்னால் இதை உறுதியாக சொல்ல முடியும். வேறு யார் அது போன்று அடித்திருந்தாலும் நான் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருப்பேன், என்னால் அதில் இருந்து மீண்டு வந்திருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான், ஆனால் தலைசிறந்த வீரரான விராட் கோலி அடித்ததால் தான் நான் சற்று ஆறுதல் அடைந்தேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை