CT2025: கருண் நாயர் அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை - தினேஷ் கார்த்திக்!

Updated: Fri, Jan 17 2025 13:24 IST
Image Source: Google

அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களும் இந்திய அணியின் தேர்வில் உள்ளன. இதற்கிடையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் கருண் நாயர் என்பது தான். 

ஏனெனில் தற்சமயம் நடைபெற்று வரும் இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கருண் நாயர் இதுவரை 752 என்ற அற்புதமான சராசரியுடன் 752 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இத்தொடரில் அவர் விளையாடிய 7 இன்னிங்ஸில் 5 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த அதிரடியான செயல்பாட்டிற்குப் பிறகு, அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

அதிலும் அவர் பேட்டிங் செய்த ஏழு இன்னிங்ஸ்களில், அவர் ஆறு முறை 50 ரன்களைக் கடந்துள்ளார், ஒத்தொடரில் அவரது குறைந்த பட்ச ஸ்கோர் என்பது ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்ததுதான். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "கருண் நாயர், நீங்கள் இருக்கும் ஃபார்மைப் பார்ப்பது நம்பமுடியாததாக இருக்கிறது. மயங்க் அகர்வால் கூட நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அழகு என்னவென்றால், இந்திய ஒருநாள் போட்டி அமைப்பு கிட்டத்தட்ட தயாராக இருக்கும் நேரத்தில் இவர்கள் இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் பெரிதளவில் மாற்றங்கள் இருக்க முடியாது.

கருண் நாயர் தற்போது இருக்கும் ஃபார்மில் அவரை அணிக்கு கொண்டுவருவது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, மேலும் அவர் தேர்வுகுழுவின் உரையாடலில் ஒரு பங்காகவும் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்த அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து இதேபோல் சிறப்பாக செயல்பட்டால் அவரை ஏன் தேர்வு செய்ய கூடாது?

Also Read: Funding To Save Test Cricket

வேகமாக விளையாடி நன்றாக சுழலும் அந்த மாதிரியான ஒரு ஃபார்ம் பேட்டர், அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக இருப்பார். நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேசமயம் இங்கிலாந்து டி20 தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவர் நிச்சயம் இடம்பிடிப்பதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படுவார்” என்றும் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை