விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்!

Updated: Tue, Nov 07 2023 12:08 IST
விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்! (Image Source: Google)

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் டவுட் முறையில் ஆட்டம் இழந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்று கூறி வங்கதேச அணியினர் இந்த விதியை பயன்படுத்தி அவுட் வழங்குமாறு நடுவரிடம் கேட்டனர். இதன் மூலம் நடுவர் அவுட் வழங்கி இருக்கிறார்.

இதுதான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வங்கதேச அணியின் இந்த செயல் மிகவும் மோசமானது என்று மேத்யூஸ் விமர்சித்து இருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி கீழ்த்தனமாக நடந்து கொண்டு தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், “தாம் ஏன் அந்த விதியை பயன்படுத்தினேன் என்பது குறித்து பேசினார். மேத்யூஸ் களத்திற்கு வராத நிலையில், எங்கள் அணி வீரர் ஒருவர் நாம் இதற்கு அவுட் கேட்டால் மேத்யூஸ் ஆட்டம் இழந்து விடுவார் என்று எனக்கு யோசனை வழங்கினார். நான் இது குறித்து நடுவரிடம் கேட்டு டைம் அவுட் முறையை பயன்படுத்த விரும்பினேன். 

அது விதிப்படி அவுட் என்றால் நான் அந்த விதியை பயன்படுத்த விரும்பினேன். நான் செய்தது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் விதிப்படிதான் நான் அதை செய்தேன். நான் இது குறித்து நடுவரிடம் கேட்டபோது அவர்கள் நீங்கள் உண்மையாகவே அவுட் கேட்கிறீர்களா இல்லை விளையாட்டுக்கு கேட்கிறீர்களா என்பது போல் பதில் அளித்தார்கள். நான் உடனே இல்லை நான் உண்மையாகத்தான் இதற்கு அவுட்டு கேட்கிறேன் என்று மீண்டும் ஒருமுறை கூறினேன்.

இதனை அடுத்து தான் நடுவர்கள் அவுட் வழங்கினார்கள். நான் செய்தது தவறு என்றால் இந்த விதியை வைத்த ஐசிசி தான் இதனை மாற்ற வேண்டும். ஏஞ்சலோ மேத்யூஸ் தன்னிடம் வந்து இந்த அவுட்டை திரும்பி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டார். ஆனால் நான் என் நாட்டுக்காக நான் தற்போது விளையாடி வருகிறேன். இது நிச்சயம் துரதிஷ்டவசமானது தான். ஆனால் என்னால் அவுட் கேட்டதை திரும்பி பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை