காயம் காரணமாகவே நான் இதுவரை அதிகம் பந்து வீசவில்லை - அக்ஸர் படேல்!

Updated: Wed, Apr 23 2025 11:32 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் 15 ரன்னிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 51 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 57 ரன்களையும், கேப்டன் அக்ஸர் படேல் 34 ரன்களையும் சேர்த்ததன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்டன் அக்ஸர் படேல், “நாங்கள் பந்வீச்சை ஆரம்பித்தில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ஆட்டத்தின் மீது எங்கள் கட்டுப்பாட்டை வைத்திருந்தோம். 2 விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன், எங்களுக்கு கூடுதல் உத்வேகம் கிடைத்தது, அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதுடன் எதிரணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். மேலும் எனது காயம் காரணமாகவே நான் இதுவரை அதிகம் பந்து வீசவில்லை.

ஆனால் தற்போது அதிலிருந்து குணமடைந்ததன் காரணமாக இன்று நான் நல்ல தாளத்துடன் பந்து வீசினேன். மேலும் இப்போட்டியில் வீரர்களின் மேட்ச்-அப்களையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அதற்கேற்றவாறு தான் என் பந்து வீச்சாளர்களையும் நான் பயன்படுத்தினேன். அவர்களும் எங்களில் திட்டத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக பதிலளித்தனர். நான் பேட்டிங் செய்ய வெளியே செல்லும் போதெல்லாம், எந்த நிலையில் பேட்டிங் செய்தாலும், என் பலத்திற்கு ஏற்ப விளையாடுவேன்.

Also Read: LIVE Cricket Score

அத்துடன் பந்து வீச்சாளரை வரிசைப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம் வெற்றி பெற்று வருகிறேன் என்ப்தால் எனது கேப்டன்சியை நன்றாக உணர்கிறேன். இருப்பினும் நாங்கள் எங்களுடைய ஃபீல்டிங்கை கொஞ்சம் மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் இனிவரும் போட்டிகளில் நாங்கள் கேட்ச்சுகளை தவறவிட்டால் அது ஆட்டத்தில் பெரும் பங்கினை வகிக்கும். அதனால் அதில் நாங்கள் மேம்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை