அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்தும் வெளியேறியது. 

Advertisement

இதனையடுத்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பாபர் ஆசாமின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்விகளும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளனர். முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு, அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

Advertisement

அவருக்குப் பதிலாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தானின் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொட்ருக்காக பாபர் ஆசாம் மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையிலும், அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் தான் ஷாஹீன் அஃப்ரிடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்ற கேள்விகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நோக்கி எழுப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பதிலளித்துள்ள ஷாஹின் அஃப்ரிடி, “எனக்கு எப்போதும் முதலில் பாகிஸ்தான் தான் முதல் முன்னுரிமை. அதன்பிறகு என்னுடைய அணிக்கு முன்னுரிமை கொடுக்கிறேன். . கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க எனக்குப் பிடிக்கவில்லை. நிகழ்காலத்தில் இருப்பதே எனது வேலை, எதிர்காலத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. உங்கள் நிகழ்காலம் நன்றாக இருந்தால், நீங்கள் எதிர்காலத்திற்கு நன்கு தயாராகலாம்.

மேலும் அணியின் கேப்டன் பதவி என்பது என் கைகளில் இல்லை, கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை. நான் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், அதை கண்ணியத்துடன் செய்வேன். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நான் நீக்கப்படுகிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. கிரிக்கெட் விளையாடுவது எனது பங்கு, அதை நான் கண்ணியத்துடன் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News