கடந்த மூன்று ஆண்டுகளில் நான் சிகப்பு பந்தை தொட்டது கூட இல்லை - ரஷித் கான்!

Updated: Mon, Jan 06 2025 21:39 IST
Image Source: Google

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின் இரண்டாவது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா 139 ரன்களையும், இஸ்மத் அலாம் 101 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 363 ரன்களைக் குவித்தது. மேற்கொண்டு ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் கேப்டன் கிரேய்க் எர்வின் 53 ரன்களையும் சிக்கந்தர் ரஸா மற்றும் பென் கரண் ஆகியோர் தலா 38 ரன்களையும் சேர்த்தனர். 

அதேசமயம் மற்ற வீரர்கள் ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 205 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மத் ஷா தொடர்நாயகன் விருதையும் வென்றார். இப்போட்டி முடிந்து பேசிய ரஷித் கான், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும், முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து நீண்ட வடிவத்தில் விளையாடுவது எனக்கு கடினமாக இருந்தது.

இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றது ஒட்டுமொத்த அணியின் முயற்சியாகும். ஏனெனில் முதல் இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை மீண்டும் விளையாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் நான் சிவப்பு பந்தில் அதிகம் பந்து வீசவில்லை, அதிலும் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் நான் அதைத் தொட்டது கூட இல்லை.

Also Read: Funding To Save Test Cricket

கடந்த 10-12 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் நான் என்ன செய்து வருகிறேன் என்று நான் நம்பிக்கை வைக்க முயற்சித்தேன். நான் வேகமாக அல்லது மெதுவாக பந்துவீசுகிறேனா என்பது முக்கியமல்ல. இருப்பினும் நான் வீசும் லெந்த் தான் கொஞ்சம் சிக்கல்களை உருவாக்குகிறது. அதனா என்னால் முடிந்தவரை விரைவாக நிலைமைகளை சரிசெய்ய முயற்சிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை