ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஹர்ஷித் ரானா!

Updated: Mon, Oct 28 2024 13:04 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காயம் காரணமாக கடந்தாண்டு முதல் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இத்தொடரிலும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ள ஹர்ஷித் ரானா, இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது தந்தையின் கனவாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோதுதான் நான் ஆஸ்திரேலியா செல்கிறேன் என்பது எனக்கு தெரிந்தது. ஆனால் அவர்கள் என்னைத் தயார்படுத்துவதற்காக அணியில் வைத்திருந்ததால் நான் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றே எனக்கு தோன்றியது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டது எனக்கு பெரிய விஷயம். நான் போட்டி மனப்பான்மையுடன் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். 

இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உணர்வுடன் ஒத்துப்போகிறது. இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது தந்தையின் கனவாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில், ஆஸ்திரேலியாவை ஒரு அணியாக எதிர்கொள்வதில் நான் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியில் எனது பெயரைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை