நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரஜ்த் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றும் அசத்தியுள்ளது. 

Advertisement

ஒருபக்கம் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ள நிலையில், மறுப்க்கம் ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த முறை அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறி புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் முடித்தது. அதிலும் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை முடிப்பது இதுவே முதல் முறையாகவும் அமைந்தனது.

Advertisement

இதனால் அடுத்த சீசனுக்கான தயாரிப்புகளில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியானது அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்சமயம் 43 வயதை எட்டியுள்ள தோனி, மேற்கொண்டு ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடும் அளவிற்கான உடற்தகுதியில் இல்லை. இதனால் இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்ற கருத்துகளும் வெளியாகி வருகின்றன. 

மறுபக்கம் தனது ஓய்வு முடிவு குறித்து முடிவெடுக்கும் நேரம் உள்ளது என எம் எஸ் தோனி தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது இதுவரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் எம் எஸ் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் விளையாடுவார்களாக என்பது குறித்த தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மைக்கேல் கிளார்க், “எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் எம் எஸ் தோனி மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். சிஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு முறையும், வெளி மைதான போட்டிகளில் கூட, மற்ற அணி ரசிகர்களை விட அதிகமான சென்னை ரசிகர்கள் போட்டியை காண்பதற்காக வருகின்றனர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதும் தோனியால் தான், ரசிகர்கள் போட்டியை காண வருவதும் தோனியால் தான். மேலும் அவர் தான் அந்த அணியின் ராஜா. அவர்கள் தொடர்ந்து தோனியை விளையாடவைக்க விரும்புகிறார்கள், அதன் தாக்கத்தை மக்கள் உணரவில்லை என்று நினைக்கிறேன். அவர் ஓய்வு பெற முடிவு செய்யும்போது, ​​அது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News