ஹர்ஷித் ரானாவை தேர்வு செய்தது சரியான முடிவு - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காயம் காரணமாக கடந்தாண்டு முதல் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இத்தொடரிலும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது.
இந்தியா வெளிநாடுகளுக்குச் சென்று விளையடௌ ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் நீங்கள் பார்த்தால், அதில் ஏதேனும் ஒரு அறிமுக வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். இதனைத் தற்போது எல்லா அணிகளுக்கும் செய்து வருகின்றன. அறிதாகவே அனுப்வம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு நல்ல தேர்வு என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.