ரிஷப் பந்தை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
இதையொட்டி இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார்.
இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி20 போட்டியில் ரிஷப் பந்த் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை .தொடர்ந்து தடுமாறி வருகிறார்.இதனால் பண்ட் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ரிஷப் பந்த் இந்திய அணியில் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய'அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,"அடுத்த டி20 உலகக் கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவுள்ளது. எனவே அங்குள்ள நிலைமைகளை மனதில் வைத்து, ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள் பேட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரது ஐபிஎல் சாதனைகளைப் பார்த்தால், அவரது சிறந்த ஆட்டங்கள் . தொடக்கம் அல்லது அவர் 3ஆவது இடத்தில் அவர் பேட்டிங் செய்த போது, அவருக்கு கிடைத்துள்ளன. அவருக்கு மேட்ச் வின்னர் ஆக வாய்ப்பளிக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால் சஞ்சு சாம்சன் போன்றவர்களை நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம். ராகுல் திரிபாதி ,தீபக் ஹூடா ஆகியோரை பினிஷர் ரோலுக்கு பயன்படுத்தலாம் . உம்ரான் மாலிக் கண்டிப்பாக விளையாடக்கூடிய ஒரு பந்து வீச்சாளர்” என தெரிவித்துள்ளார்