அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களையும், நமன்திர் 27 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும், ஜோஷ் இங்கில் 38, நெஹால் வதேரா 48 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்த விதம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது, அவர் விளையாடிய சில ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவர்கள் நிச்சயமாக நன்றாக பேட்டிங் செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. இதுபோன்ற பெரிய ஆட்டங்களில் அது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

Also Read: LIVE Cricket Score

நான் குறிப்பிட்டது போல் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள், எங்களை அழுத்தத்தில் தள்ளினர், அதனால் நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை என்று நினைக்கிறேன். அதற்காக நான் விக்கெட்டை குறைகூற மாட்டேன். நாங்கள் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டியிருந்தால், அது யாரோ ஒருவர் சரியான லென்த் பந்து வீசியிருக்கலாம் அல்லது சரியான புள்ளியில் சரியான பந்து வீச்சாளர் வீசியிருந்தால் முடிவு கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News