இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
ஷுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடரும், அதனைத் தொடர்ந்து டி20 தொடரும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சாதாரண வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும், இந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதன் காரணமாக அவர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் என்று வருன் சக்ரவர்த்தி கூறி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது நிகழ்ச்சியின் போது பேசிய அவர், “இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், துபாயில் உள்ள மைதானத்தைப் பார்த்தால், அதில் என்னால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று தோன்றியது. ஏனெனில் அவை கொஞ்சம் மெதுவாக இருப்பதன் காரணமாக, என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. அதில் என்னுடைய பங்கு என்னவென்றால், ஸ்டம்ப்களுக்கு நேராக பந்துவீசி பேட்டர்களுக்கு சவால் விடுவது மட்டுமே. அதுதான் நான் விக்கெட் எடுக்க ஒரு அடிப்படை காரணம்” என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 24 போட்டிகளில் 2 ஐந்து விக்கெட்டுகள் உள்பட, 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு ஐந்து விக்கெட் உள்பட் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுபோன்ற சூழலில் தான் அவர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்ஸர் படேல், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஹர்ஷதீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.