இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!

Updated: Mon, Jun 14 2021 15:27 IST
Image Source: Google

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் இப்போட்டிடில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சேவாக் “வரும் 18ஆம் தேதி தொடங்கும் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் நம்பும் ஒரு விசயம், நீங்கள் உங்களுடைய பலத்துடன் விளையாட வேண்டும் என்பதுதான். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் அது சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், 4ஆவது மற்றும் 5ஆவது நாளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்பத்தக் கூடும் என நம்புகிறேன்.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு நல்லது. அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆல்-ரவுண்டர் திறமை பெற்றவர்கள். இருவரும் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள். இவர்கள் இருவர் இருக்கும்போது, 6ஆவது பேட்ஸ்மேன் தேவையில்லை.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ட்ரெண்ட் போல்ட்- டிம் சௌதி ஜோடி கடுமையான சவால் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவராலும் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். இருவரும் இணைந்து பந்து வீசுவது திறமைமிக்கதாக இருக்கும்.

ரோகித் -  போல்ட் இடையிலான போட்டியை எதிர்நோக்குகிறேன். ரோகித் சர்மா களத்தில் செட்டாகி நிற்பது, டிரென்ட் போல்டின் முதல் ஸ்பெல்லை ஆஃப் செய்வது பார்ப்பதற்கு விருந்தாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை