டான் பிராட்மண் செய்த அதே அறிவுரையை தான் விராட் கோலிக்கும் கொடுக்கிறேன் - சந்து போர்டே!

Updated: Fri, Aug 19 2022 15:21 IST
Image Source: Google

சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐயும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்த விராட் கோலி, எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரிலாவது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விராட் கோலி மீது அக்கறை உள்ள சிலர் விராட் கோலி தன்னுடைய மோசமான பார்மில் இருந்து மீலுவதற்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சந்து போர்டே, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் சார் டான் பிராட்மண்ட் செய்த யுக்தியை விராட் கோலி செய்தால் நிச்சயம் மோசமான பார்மிலிருந்து மீண்டுவிடுவார் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சந்து ,“நாங்கள் 1968 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாட சென்ற போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் சார் டான் பிராட்மண்ட், விராட் கோலி சந்திப்பது போன்று மிக மோசமான பார்மிலிருந்தார். அப்போது அவர் பயிற்சி நேரங்களில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடுவதற்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். 

அதற்குப் பின் அவர் எங்களுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். நான், சார் டான் பிராட்மண்ட் செய்த அதே அறிவுரையை தான் விராட் கோலிக்கும் கொடுக்கிறேன், வலைப் பயிற்சி ஒவ்வொரு பந்தயும் அவர் அடித்தாட வேண்டும், ஆனால் நேர்மையாக சொல்லப்போனால் விராட் கோலிக்கு எந்த பயிற்சி இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு உதவியாக இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இதுபோன்ற நெருக்கடி ஒவ்வொரு வீரர்களுக்குமே வரும் அதிலிருந்து மீள்வதற்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை