ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
வரும் 7ஆம் தேதி நடைபெறும் உள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. அதேசமயம் 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் ரஹானே திரும்பியுள்ளார். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ரஹானே 600 ரன்கள் அடித்திருக்கிறார்.
யாருமே எதிர்பாராத வகையில் ரஹானேவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை அவர் பயன்படுத்தி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஹானே குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், “இம்முறை ரகானேவுக்கு பெரிய அழுத்தம் இருக்காது என்று நான் நினைக்கிறேன். காரணம் அவர் ஏற்கனவே அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஏற்கனவே ஓய்வு பெற்ற என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதனால் அவர் பெரிய அளவில் பதட்டமாக இருக்க மாட்டார். மேலும் ரஹானே கடைசியாக சர்வதேச டெஸ்டில் எப்படி விளையாடினாரோ அந்த ஃபார்மை தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நானும் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் அந்த ரன்கள் எல்லாம் உங்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் உத்வேகத்தையும் பெரும் அளவில் கொடுக்காது.
எனவே ஒரு வித்தியாசமான ரகானே நாம் பார்க்கப் போகிறோம் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் வெற்றிகரமாக விளையாடினால் அது அணிக்கு நிச்சயம் நல்லது தான். ஆனால் நான் ரகானை விடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏதும் வைக்கவில்லை. என்னுடைய முக்கியமான வீரர்கள் ரோஹித் சர்மா, புஜாரா, விராட் கோலி தான் ” என்று கூறியுள்ளார்.