இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!

Updated: Thu, Sep 15 2022 21:06 IST
Image Source: Google

கடந்த வருட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிக மிக மோசமான தோல்விகளை சந்தித்து, லீக் சுற்றுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலியும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். 

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்றது. இந்திய அணி அடுத்தடுத்து பல வெற்றிகளை பெற்றதால் இந்திய அணியில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது, இந்த முறை இந்திய அணி அசால்டாக டி20 உலகக்கோப்பையை வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை சமாளிக்க முடியாத இந்திய அணி, டி.20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா போன்ற அசுரபலம் கொண்ட அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ளும், பேட்டிங் ஆர்டரில் நிலவி வரும் பிரச்சனைகள் எப்பொழுது தான் சரி செய்யப்படும் என கேள்வி வலுத்து வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அதே போல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தும் பேசும் முன்னாள் வீரர்கள் பலர், டி20 உலகக்கோப்பைக்கு முன் சரிசெய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய தேசிய தேர்வுக்குழுவின் தலைவருமான திலீப் வெங்சர்கார், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.முகமது ஷமி மட்டும் இல்லை... இந்த இரண்டு பேருக்கும் இடம் கொடுத்திருக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 5

இதுகுறித்து திலீப் வெங்சர்கார் தெரிவித்ததாவது,“ உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி, உம்ரான் மாலிக் மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். நானாக இருந்தால் அவர்களை அணியில் இணைத்திருப்பேன்.

யார் எத்தனை ரன்கள் அடிப்பார்கள் என்பதை எல்லாம் என்னால் கூற முடியாது, அது அந்த சமயத்தில் நடக்கக்கூடிய விஷயமாகும். அணியில் மாற்றங்கள் குறித்து பயிற்சியாளர், கேப்டன் மற்றும் துணை கேப்டன்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் ஆனால் சூரியகுமார் யாதவ் 4 அல்லது 5வது இடத்தில் பேட்டிங் செய்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை