ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு குறைந்துவிட்டதா? - ரோஹித் சர்மாவின் பளீச் பதில்!

Updated: Thu, Aug 18 2022 16:14 IST
Image Source: Google

பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது. 

ஒருநாள் கிரிக்கெட் இழுவையாக, சுவாரசியமின்றி உள்ளதாகத் தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அழிவதாக எண்ணுகிறீர்களா என ஒரு பேட்டியில் கேட்கப்பட்டதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “அது எந்த வகையாக இருந்தாலும் கிரிக்கெட் எனக்கு முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டோ டி20யோ டெஸ்ட் கிரிக்கெட்டோ முடிவுக்கு வருகிறது என எப்போதும் கூற மாட்டேன். புதிதாக இன்னொரு வகை கிரிக்கெட் இருந்தாலும் நல்லது. கிரிக்கெட்டில் ஈடுபடுவது தான் எனக்கு முக்கியம். 

சிறுவயது முதல் இந்தியாவுக்காக விளையாடுவதே பெரிய கனவாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் எப்போது விளையாடினாலும் மைதானம் நிரம்பி இருக்கும். மக்களின் ஆர்வம் எப்போதும் போல் உள்ளது. எந்த வகை கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு. எனக்கு மூன்று வகை கிரிக்கெட்டும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை