இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. இந்தப் போட்டி முடிந்த அடுத்த 335 நாள்களில் இன்னொரு டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
அதன்படி 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அதன்படி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது.
மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. மேலும் நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன.
மேலும் நவம்பர் 13ஆம் தேதி டி20 உலகக்கோப்பையின் இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இந்த உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன.
Also Read: T20 World Cup 2021
மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.