ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக், ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Fri, May 24 2024 19:31 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஏனெனில் எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகளும் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. 

அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதமே அறிவித்து விட்டது. இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் என நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளதும் கவனிக்கதக்கது. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், கிரேம் ஸ்மித், ஷான் பொல்லாக், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மேத்யூஸ் ஹைடன், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோரும், இங்கிலாந்தின் ஈயான் மோர்கன், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் உள்ளிட்டோரும் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “இத்தொடரில் 20 அணிகள் பங்கேற்று 56 போட்டிகளை மற்றும் புதிய மைதாங்களில் விளையாடவுள்ளதால் நிச்சயம் ஒரு பரபரப்பான தொடரை நம்மால் காண முடியும். அத்தகைய உயர்தர டி20 தொடரின் வர்ணனைக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு அருமையான உணர்வு, மேலும் நான் சமீபத்தில் விளையாடிய வீரர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது அதை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை