சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement

அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஷதாப் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

இதில் கடந்த மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சதம் விளாசி அசத்தியிருந்தார். அதேசமயம் மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஷதாப் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இருதுறையிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இருவரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

அதேபோல் இந்தியாவுடனான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களித்ததுடன், டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்ற முக்கிய காரணமாகவும் அமைந்ததின் விளைவாக அவருக்கு இப்பட்டியளில் இடம் கிடைத்துள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு புதுமுக வீராங்கனைகள் பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் நெதர்லாந்தை சேர்ந்த ஐரிஸ் ஸ்வில்லிங், மலேசிய வீராங்கனை ஐன்னா ஹமிசா ஹாஷிம் மற்றும் அயர்லாந்தை சேர்ந்த அர்லீன் கெல்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News