இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கில் 102 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Advertisement

இதற்கு முன்பு அவர், அதிகபட்சமாக 30ஆவது இடம் வரை முன்னேறியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். 2ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமும் உள்ளனர்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் பிரண்டன் கிங் 5 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தையும், கைல் மேயர்ஸ் 2 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும், ஷிம்ரான் ஹெட்மையர் 16 இடங்கள் முன்னேறி 85ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 23 இடங்கள் முன்னேறி 28ஆவது இடத்தை அடைந்துள்ளார். முதலிடத்தில் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கானும், 2ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்டும், 3ஆவது இடத்தில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகியோரும் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹோசைன் 3 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தையும், ஜேசன் ஹோல்டர் 25ஆவது இடத்தையும், ரொமாரியா ஷெப்ஃபெர்ட் 20 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News