2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு!

Updated: Mon, Jan 24 2022 18:21 IST
ICC Names Shaheen Afridi As Men's Cricketer Of 2021 (Image Source: Google)

கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வாகியுள்ளார்.

முக்கியமான இரு விருதுகளை வென்றுள்ள பாகிஸ்தான், பெரிய விருது ஒன்றையும் தட்டிச் சென்றுள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தேர்வாகியுள்ளார். 

கடந்த 2021இல் விளையாடிய 36 சர்வதேச போட்டிகளில் 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஷாஹீன் அஃப்ரிடி. டி20 உலகக் கோப்பைப் தொடரில் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்து கவனம் பெற்றார். அவருடைய பந்துவீச்சினால் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முதலாகத் தோற்றது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை