ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை பந்தாடி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Updated: Thu, Oct 12 2023 21:41 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லக்னோவிலுள்ளா ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசனும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் டி காகுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இது இந்ததொடரில் அவர் விளாசும் இரண்டாவது சதமாகும்.

அதன்பின் 8 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 109 ரன்களைச் சேர்த்திருந்த குயின்டன் டி காக் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து  அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ஐடன் மார்க்ரம் 56 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - மார்கோ ஜான்சென் ஆகியோர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீரர்கள் தவறவிட்டனர். 

அதன்பின் 26 ரன்கள் எடுத்திருந்த மார்கோ ஜான்சென் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களை எடுத்திருந்த டேவிட் மில்லரின் விக்கெட்டையும் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினார்.  இதனால் தென் ஆப்பிரிக்க அண் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 7 ரன்களுக்கும், டேவிட் வார்னர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைகுறிய முறையில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் வந்த மார்னஸ் லபுஷாக்னே ஒருபக்கம் நிதானம் காட்டம், மறுபக்கம் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 5, கிளென் மேக்ஸ்வெல் 3 என விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதிலும் பேட்டில் கை தொடர்பில்லாமல் இருக்கும் பொழுது பந்து கையுறையில் பட்டு பிடிக்கப்பட்டால் அது அவுட் கிடையாது என்பது கிரிக்கெட் விதி. 

ஆனாலும் இதற்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க மீண்டும் சர்ச்சையானது. அதன்பின் இணைந்த லபுஷாக்னே - மிட்செல் ஸ்டார்க் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் மிட்செல் ஸ்டார்க் 27 ரன்களுக்கும், மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.   

அதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் பாட் கம்மின்ஸும் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் அஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாரா, மார்கோ ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இந்த அபார வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை