ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Nov 11 2023 19:43 IST
Image Source: CricketNmore

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி 8 லீக் ஆட்டங்களில் விளையாடி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் நெதர்லாந்து அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நெதர்லாந்து
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூரு சின்னசாமி மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் ரன்களை குவிக்க ஏதுவாகவும், பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • இந்தியா - 02
  • நெதர்லாந்து -00

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்

நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சிப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி (துணை கேப்டன்), ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா, கொலின் அக்கர்மேன், லோகன் வான் பீக், பாஸ் டி லீட்
  • பந்துவீச்சாளர்கள்: முகமது சிராஜ், ரோலோஃப் வான் டெர் மெர்வே

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை