ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Nov 01 2023 15:18 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.

இந்நிலையில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நாளைய போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக வலுவான நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து தோற்கடித்த இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வெறும் 229 ரன்களை வைத்தே 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மேலும் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இந்தியாவுக்கு வலு சேர்க்கிறார்கள். அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறினாலும் பாண்டியா காயத்தால் விளையாடாவிட்டாலும் அதை சூர்யகுமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சமாளிக்கும் அளவுக்கு தரமாக இருக்கின்றனர்.

அது போக பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் வேகத்திப் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வரும் நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் மாயாஜாலம் செய்து வருகிறார். எனவே ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இலங்கையை தோற்கடித்தது போலவே இப்போட்டியிலும் இந்தியா வெற்றி வாகை சூடும் என்றே சொல்லலாம்.

குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தவிப்பதுடன் அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. போதாகுறைக்கு ஹஷரங்கா, ஷனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது இலங்கைக்கு பெரிய பின்னடைவாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அனுபவ ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் கடந்த சில போட்டியில் வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடியது இலங்கைக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. 

அவருடன் அசலங்கா, கருணரத்னே, நிஷங்கா, சமரவிக்ரமா, தனஞ்செயா டி செல்வா ஆகியோர் பேட்டிங் துறையை தாங்கிப் பிடிக்கும் வீரர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்னோடியாக கேப்டன் குசால் மெண்டிஸ் மற்றும் குசால் பெரேரா ஆகியோர் வெற்றிக்கு டாப் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

அதே சமயம் வெல்லாலகே, மஹீஸ் தீக்சனா ஆகியோர் இந்திய பேட்ஸ்மன்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு தரமான ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். குறிப்பாக வெல்லாலகே 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவின் விராட் கோலி போன்ற டாப் 5 பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய தரத்தை கொண்டுள்ளார். இவர்களுடன் மதுஷங்கா, சமீரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் வெற்றிக்கு போராட்ட தயாராக இருக்கின்றனர்.

பிட்ச் ரிப்போர்ட்

வான்கடே மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி 399, 382 ரன்கள் அடித்து நொறுக்கி வெற்றி கண்டது. இங்குள்ள பிட்ச் இப்போட்டியிலும் ஃபிளாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் சிறிய பவுண்டரிகளை பயன்படுத்தி நங்கூரமாக நின்றால் பெரிய ரன்களை எளிதாக அடிக்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 167
  • இந்தியா - 98
  • இலங்கை - 57
  • முடிவில்லை - 12

உத்தேச லெவன்

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

இலங்கை: பதும் நிஷங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷ்மந்த சமீரா, மகேஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, டில்ஷான் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கே.எல்.ராகுல், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷுப்மான் கில்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ஏஞ்சலோ மேத்யூஸ்
  • பந்துவீச்சாளர்கள்- முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), குல்தீப் யாதவ், தில்ஷன் மதுஷங்கா.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை