ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Oct 22 2023 16:50 IST
Image Source: CricketNmore

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹித் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினர். ஆனால் அதன்பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான போட்டியில் படுதோல்வியைச் சந்தித்து பின்னடைவை சந்தித்து  வருகிறது. 

அந்த அணியின் பேட்டிங்கில் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கிவருகின்றன. ஆனால் கேப்டன் பாபர் ஆசாம், இஃப்திகார் அஹ்மத், சௌத் சகீல் போன்ற பேட்டர்கள் தொடர்ந்து சோபிக்க தவறிவருவதால் அந்த அணியின் பேட்டிங் வரிசை சரிவை சந்தித்து வருவது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. 

மறுபக்கம் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் ரன்களை கட்டுப்படுத்துவதுடன் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றிவருகின்றனர். ஆனால் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராவுஃப் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரன்களை வாரி வழங்கிவருவது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களது தவறுகளை திருத்தி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தாலும், விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வியைத் தழுவியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் ரஹ்மனுல்லா குர்பாஸ் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் அவர் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஆனால் மற்ற பேட்டர்களான இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி போன்ற வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு இக்கெட்டுகளை இழப்பது அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. இவர்களில் ஒருசிலர் சிறப்பாக செயல்பட்டால் கூட ஆஃப்கானிஸ்தான் அணியால் கடின இலக்கையும் எளிதாக எட்டமுடியும்.

அணியின் பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மன், முகமது நபி என உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்கள் இருப்பது ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோரும் இருப்பதால் அணியின் பந்துவீச்சு துறை வலிமையானதாக பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக்கட்ட ஓவர்களில் சூழ்நிலைகளை புரிந்து நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஆனால் மேலும் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி சேசிங் செய்வதற்கு சமமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

 நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 07
  • பாகிஸ்தான் - 07
  • ஆஃப்கானிஸ்தான் - 00

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப்.

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக்.

ஃபேண்டஸி லெவன்  டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள்- இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக்
  • ஆல்ரவுண்டர் - முகமது நபி, இப்திகார் அகமது, அஸ்மத்துல்லா உமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள்- ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஷாஹீன் அப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ரவுஃப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை