டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 150 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!

Updated: Sun, Oct 30 2022 10:12 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரி சூப்பர் 12 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று குரூப் 2 உள்ள அணிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி அந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் - சௌமியா சர்க்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய பிளெசிங் முசரபாணி, ரன் ஏதுமின்றி களத்தில் இருந்த சௌமியா சர்காரின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் களமிறங்கிய லிட்டன் தாஸ் 14, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 23 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் அரைசதம் கடந்து அசத்தினார். அரைசதம் கடந்த பின் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து நஜ்முல் ஹொசைன் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார்.

பின்னர் 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்த நஜ்முல் ஹொசைன், சிக்கந்தர் ரஸா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் அஃபிஃப் ஹொசைன் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நகர்வா, பிளெசிங் முசரபானி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை