ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்ரேயாஸ் முன்னேற்றம், விராட் சறுக்கல்!
அதில் சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தியதில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தார், ஆனால் நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஐசிசி தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இலங்கைக்கு எதிரான பெங்களூருவில் நடந்த பகலிரவு இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளுடன் திரும்பிய பும்ரா, பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் ஷாஹீன் அஃப்ரிடி, கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, ஜேம்ஸ் ஆண்டர்சன், நீல் வாக்னர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரைக் கடந்தார்.
முன்னாள் கேப்டன் கோலி, பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 4 இடங்களில் வீழ்ச்சியடைந்தார், ஆனால் 10 வது இடத்தில் இருக்கும் ரிஷப் பந்தை விட சற்று முன்னால் 9ஆவது இடத்தில் கோலி வர முடிந்துள்ளது.
இருப்பினும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடித்த இந்தியராக ஆறாவது இடத்தைப் பிடித்தார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 92 மற்றும் 67 ரன்கள் எடுத்ததன் மூலம், 40 இடங்கள் முன்னேறி பேட்டிங் தரவரிசையில் 37ஆவது இடத்தைப் பிடித்தார் ஸ்ரேயஸ் அய்யர்
இலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணாரத்னே பெங்களூருவில் இரண்டாவது இன்னிங்ஸில் 107 ரன்களை குவித்ததன் மூலம் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்தை பிடித்ததால், ரவீந்திர ஜடேஜா நம்பர் நம்பர் ஒன் இடத்திலிருந்து பின்னடைவு கண்டார்.
இந்த மாத தொடக்கத்தில் மொஹாலி டெஸ்டில் 175 நாட் அவுட் மற்றும் ஒன்பது விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜடேஜா நம்பர் 1 ஆக உயர்ந்தார் இப்போது ஜேசன் ஹோல்டர் நம்பர் 1. ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், முகமது ஷமி, சகவீரர் ரவீந்திர ஜடேஜாவை இடமாற்றம் செய்து, 17வது இடத்திற்கு முன்னேறினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பேட் கம்மின்ஸ், அஸ்வின், ககிசோ ரபாடா ஆகியோர் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளனர்.