IND-W vs SA-W, Final, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் இதுநாள் வரையிலும் உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், எந்த அணி முதல் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

IND-W vs SA-W: Match Details

மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர்
இடம் - டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானம், நவி மும்பை
நேரம்- நவம்பர் 2, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

IND-W vs SA-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோ-ஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

IND-W vs SA-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 34
  • India Women: 20
  • South Africa Women: 13
  • No Result: 01

IND-W vs SA-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 3 சர்வதேச ஒருநாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி இரண்டு முறையும், சேஸிங் செய்த அணி ஒரு முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வாது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IND-W vs SA-W: Possible XIs

Advertisement

India Women: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேட்ச்), ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், சினே ராணா, அமன்ஜோத் கவுர், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி

South Africa Women: தஸ்மின் பிரிட்ஸ், லாரா வால்வார்ட் (கேப்டன்), அன்னேரி டெர்க்சன், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சோளே டிரையோன், நாதின் டி கிளெர்க், சினாலோ ஜஃப்டா, அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா

IND-W vs SA-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

இந்தியாவின் முக்கிய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஏனெனில் இந்தியாவின் வாய்ப்புகள் பெரும்பாலும் அவரது பேட்டிங் செயல்திறனைப் பொறுத்தது. தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை, கேப்டன் லாரா வோல்வார்ட் தான் முக்கிய வீரராக இருப்பார்.

Probable Best Bowler

தென் ஆப்பிரிக்க அணிக்காக மரிஸான் கேப்பும், இந்தியாவுக்காக கிராந்தி கவுட்டும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக் கூடும். 

Advertisement

Today Match Prediction: இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. 

Also Read: LIVE Cricket Score

IND-W vs SA-W Prediction Final, ICC Womens World Cup 2025, Today Match IND-W vs SA-W, IND-W vs SA-W Prediction, IND-W vs SA-W Predicted XIs, Injury Update of the match between India Women vs South Africa Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News