அண்டர் 19 உலகக்கோப்பை: வெளுத்து வாங்கிய டாம் பிரஸ்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!

Updated: Fri, Jan 21 2022 12:36 IST
ICC U19 CWC 2022 - England Beat UAE By 189 Runs (Image Source: Google)

அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜார்ஜ் தாமஸ் - பெத்தல் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் டாம் பிரஸ்ட் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 

இதில் சதமடித்த டாம் பிரஸ்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 154 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அந்த அணியில் அலி நேசர் மட்டும் ஓரளவு நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்ளை இழந்தனர். 

இதனால் 38.2 ஓவர்களிலேயே யுஏஇ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ரெஹன் அஹ்மத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் இங்கிலாந்து அண்டர் 19 அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அண்டர் 19 அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை