அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில்  நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி டெவால்ட் ப்ரீவிஸின் அபார சதத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் 104 ரன்களைச் சேர்த்தார். உகாண்டா அணி தரப்பில் ஜுமா மியாஜி, பஸ்கல் முருங்னி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய உகாண்டா அணி எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

இதனால் 33.4 ஓவர்களிலேயே உகாண்டா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News