அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!

Updated: Tue, Jan 18 2022 11:45 IST
Image Source: Google

அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் காம்பெல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்காததால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் கேப்டன் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் இலக்கை துரத்திய இலங்கை அணியில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் வீழ்தாலும், கேப்டன் துனித் வெல்லலகேவின் அதிரடியான அரைசதத்தினால் 37 ஓவர்களிலேயே இலங்கை அணி இலக்கை எட்டியது. 

இதன்மூலம் இலங்கை அண்டர் அணி 19  நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் பேட்டிங், பவுலிங் என அசத்திய துனித் வெல்லலகே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை