மகளிர் ஒருநாள் தரவரிசை: மிதாலி ராஜ், கோஸ்வாமி முன்னேற்றம்!

Updated: Tue, Mar 29 2022 22:27 IST
ICC Women's Rankings: Mithali Raj Climbs Three Places In Latest ODI Rankings (Image Source: Google)

மகளிர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

இதில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்த மிதாலி ராஜ், ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ் மற்றும் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 686 புள்ளிகளுடன் 6 இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி இரண்டு இடங்கள் முன்னேறி 663 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 669 புள்ளிகளுடன் 10 இடத்தை பிடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் இரண்டு இடங்கள் முன்னேறி, ஆஸ்திரேலிய ஜோடியான மெக் லனிங் மற்றும் பெத் மூனியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை