மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்த முகமது ஷமி!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஒவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் முகமது ஷமி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 முறை 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதற்குமுன்பாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்ததே சாதனையாக இருந்தது. குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்தாலும் விளையாடும் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார் ஷமி.
இதுவரை 13 இன்னிங்ஸில் 6 முறை 4 விக்கெட்டுகளை அடுத்து அசத்திய ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையை முன்னிட்டு ஐசிசி நிர்வாகம் ஷமிக்கு புதிய போஸ்டரினை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டார்க், ஷமி இருக்கும் புகைப்படத்துடன் உலகக் கோப்பையில் அதிகம் முறை 4 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.