இயல்பான மனநிலையுடன் உள்ள கோலி மீண்டு வருவார் - ரவி சாஸ்திரி

Updated: Tue, Aug 23 2022 20:01 IST
Image Source: Google

15ஆவது ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது, இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி எந்தளவு எதிர்பார்க்கப்படுகிறதோ அதே அளவு விராட் கோலியும் இத்தொடரில் ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டன் விராட் கோலி சதமடிக்கவில்லை. கடந்த 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. 

அது அவருடைய 70ஆவது சதம் மற்றும் 27ஆவது டெஸ்ட் சதம். ஆனால் அதன்பின் அவர் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில் கோலி பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இயல்பான மனநிலையுடன் உள்ள கோலி மீண்டு வருவார். ஏனெனில் பரபரப்பு அடங்கிவிட்டது. சில காலம் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ளார். முதல் ஆட்டத்தில் (பாகிஸ்தானுக்கு எதிராக) கோலி அரை சதமெடுத்தால் மீதமுள்ள ஆசியக் கோப்பை போட்டி வரை அனைவருடைய வாயையும் அடைத்து விடுவார். 

கடந்த காலத்தில் நடந்தது முடிந்துவிட்டது. பெரிய வீரர்கள் தகுந்த நேரத்தில் மீண்டெழுவார்கள். பணிச்சுமையிலிருந்து விடுபட அவர்களுக்கு ஓய்வு தேவை. மோசமாக விளையாடும் தருணத்தை எதிர்கொள்ளாத கிரிக்கெட் வீரரே உலகில் இல்லை” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை