ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: நைட் ரைடர்ஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேப்பிட்டல்!

Updated: Tue, Feb 13 2024 21:44 IST
ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: நைட் ரைடர்ஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேப்பிட்டல்! (Image Source: Google)

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தை பிடித்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, நான்காம் இடத்தை பிடித்துள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாம் பாண்டன் - மேக்ஸ் ஹோல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பாண்டன் அதிரடியாக தொடங்க, மறுபக்கம் மேக்ஸ் ஹோல்டன் ஒரு ரன்னிலும், லுயிஸ் டு ப்ளூய் 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் பாண்டனும் 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் ஜோடி சேர்ந்த டாம் அபேல் - கேப்டன் சாம் பில்லிங்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த டாம் அபேல் 41 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் பில்லிங்ஸுடன் இணைந்த சிக்கந்தர் ரஸா வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசினார். 

அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்கள் எடுத்த நிலையில் சிக்கந்தர் ரஸா விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் பில்லிங்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. அபுதாபி அணி தரப்பில் சபிர் அலி ராவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை