ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 132 ரன்களில் சுருட்டியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான துபாய் கேப்பிட்டல்ஸ் அணியும், ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய பென் டங்க் ரன்கள் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் கடந்த போட்டியைப் போல் அதிரடியாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடன் இருந்தது.
ஆனால் அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் சோப்ராவும் 20 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அதிரடி வீரர் ரோவ்மன் பாவெலும் 10 ரன்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியது.
இருப்பினும் ஒருமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்களைச் சேத்தார். இததன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்தது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் கார்லோஸ் பிராத்வைட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.