ஐஎல்டி20 2024: தீக்‌ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!

Updated: Mon, Jan 29 2024 21:49 IST
ஐஎல்டி20 2024: தீக்‌ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)

ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பென் டங்கும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் சிக்கந்தர் ரஸா ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுபக்கம் சாம் பில்லிங்ஸ் 9 ரன்களுக்கும், மேக்ஸ் ஹோல்டன் ரன்கள் ஏதுமின்றியும், ரோவ்மன் பாவெல் 10 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து மஹீஷ் தீக்‌ஷனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் 22 ரன்களில் சிக்கந்தர் ரஸா ஆட்டமிழக்க, வேண்டர் மோர்வ் 21 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளையும், டேனியல் சம்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை