ஐஎல்டி20: நைட் ரைடர்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது எம்ஐ எமிரேட்ஸ்!

Updated: Sat, Feb 04 2023 11:20 IST
ILT20: Breezy Knocks By Md Waseem, Pollard Take MI Emirates To Playoffs (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - எம்ஐ எமீரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அபுதாபியிலுள்ள ஷேக் சயித் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் - முகமது வசீம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தின.

பின் 22 ரன்களில் ஃபிளெட்சர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கரும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் இருனத முகாமது வசீம் அரைசதம் கடந்த கையோடு 43 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்களை பறக்கவிட்டு 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் கேப்டன் பொல்லார்ட் தனது பங்கிற்கு 17 பந்துகளில் 43 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் எம்ஐ எமீரெட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதுமின்றியும், ஜோ கிளார்க் 22 ரன்களிலும், பிராண்டன் கிங் 19 ரன்களிலும், சரித் அசலங்கா 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து வந்த கொன்னொர், சுனில் நரைன், அகில் ஹொசன் என நம்பிக்கையளிக்க கூடிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் 19.2 ஓவர்களில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எமிரெட்ஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஐஎல்டி20 தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை