நான் ஓய்வு கோரி விண்ணப்பிக்கவில்லை - முஷ்பிக்கூர் ரஹீம்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அதில் ஷாகிப் அல் ஹசன், சைஃப் உதின் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியதாகவும், விக்கெட் கீப்பர் முஷ்பிக்கூர் ரஹீம்மிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தான் ஓய்வு கோரி யாரிடமும் விண்ணபிக்க வில்லை என்று முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்து வங்கதேச கிரிக்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்வதானால், “எனக்கு ஓய்வு தேவை என்று ஒருவரிடம் சொல்ல வேண்டிய நிலைக்கு நான் வரவில்லை. நான் நிச்சயமாக இத்தொடரில் விளையாட காத்திருந்தேன். ஏனெனில் நான் உலகக்கோப்பை தொடரில் எனது திறனை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் மீண்டும் வர எனக்கு ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. அப்படி இருக்கையில் நான் ஏன் ஓய்வு குறித்து சிந்திக்கபோகிறேன்” என்று தெரிவித்தார்.