இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் மற்றும் கேப்டன் ஈயன் மோர்கன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மோர்கன் 10 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய டிம் ஆம்ப்ரோஸும் 17 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் மஸ்டர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

பின்னர் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த கையோடு பில் மஸ்டர்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் டேரன் மேடி 15 ரன்களையும், டிம் பிரஸ்னன் 18 ரன்களையும், கிறிஸ் ட்ரெம்லெட் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதனா, பெரேரா, குணரத்னே உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் குமார் சங்கக்காரா - ரமேஷ் களுவிதாரண இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சங்கக்காரா ஒருமுனையில் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களுவிதாரண 16 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் குமார் சங்கக்காரா 46 ரன்களில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குமார் சங்கக்காரா 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 106 ரன்களையும், அசெலா குணரத்னே 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News